உலகம்

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம்

செய்திப்பிரிவு

ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானம் ஒன்று சிரியாவில் மாயமாகி உள்ளதாக  அந் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில்,  "ரஷ்யாவின் போர் விமானமான  Russian Il-20,  14  வீரர்களுடன் சிரியாவிலுள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்குத் திரும்பியது. அப்போது சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்டதா? என்ற கோணத்திலும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்ய விமானத்தை தாங்கள் தாக்கவில்லை என்று அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக  6 ஆண்டுகளாக நடந்து வரும் உள் நாட்டுப் போரில் சிரிய அரசப் படையுடன் ரஷ்யா போர் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT