இங்கிலாந்து இளவரசர் ஹாரி அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் யாருக்கும் தெரியாமல் தின்பண்டத்தை மறைமுகமாக எடுத்துச் சென்ற வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு பிறகு, இங்கிலாந்தின் பிரபலமான ஜோடியாக மாறியுள்ள ஹாரியும், மெக்கனும் இங்கிலாந்து சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் தவறாமல் இடப்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஹாரி சமீபத்தில் தொண்டு நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி மெக்கனுடன் கலந்துக் கொண்ட ஹாரி நிகழ்ச்சியின் முடிவில் தின்பண்டத்தை யாருக்கும் தெரியாமல், பேப்பரில் சுற்றி மறைத்து செல்வார்.
தற்போது இந்த வீடியோ இங்கிலாந்து நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.