உலகம்

அமெரிக்காவை உளவுப் பார்த்த சீன இளைஞர் கைது

செய்திப்பிரிவு

அமெரிக்காவை உளவுப் பார்த்ததாக சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அந்நாட்டு உளவுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்கா தரப்பில்,  "சீனாவுக்கு ஆதரவாக சட்டவிரோதமாக உளவாளியாக செயல்பட்டதற்காக  அந்நாட்டைச் சேர்ந்த ஜீ ஷாக்குவான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

மின் பொறியல் படிப்பிற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்த ஜீ ஷாக்குவானின் முதுகலை பட்டப்படிப்பையும் முடிந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்திலும் சேர்ந்துள்ள ஜீ ஷாக்குவானை சீனாவின் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சீனாவுக்கு ஆதரவாக உளவுப் பார்த்த குற்றத்துக்காக அவருக்கு பத்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்” என்று கூறியுள்ளனர்.

இந்த கைது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிங் ஷுவாங் உண்மை நிலவரம் தெரியாததால் கருத்து கூற இயலாது என்று கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வர்த்தகத்தில் நிலவும் போட்டிக் காரணமாக சீனா - அமெரிக்கா இடையே மோதல் நிலவி வரும் சூழ்நிலையில் சீனாவை சேர்ந்த ஒருவரை உளவுப் பார்த்ததாக அமெரிக்கா கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT