போதை மருத்து கடத்திய பாகிஸ்தான் நாட்டு விமானப் பணிப்பென் ஒருவர் இத்தாலி நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக இருப் பவர் ரஷிதா அமின். இவர் லாகூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இத்தாலி வழியாக பாரிஸ் நகரம் செல்லும் விமானத்தில் பணிப்பெண்ணாகச் சென்றார்.
அந்த விமானம் வியாழக்கிழமை இத்தாலி நாட்டின் மிலன் நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலை யத்தில் தரையிறங்கியது. அப்போது அந்த விமான நிலைய பணியாளர்கள் ரஷிதா அமினிடமிருந்த கைப்பையைச் சோதனை யிட்டனர். அதில் போதை மருந்து கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையின்போது ரஷிதா அமின் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் இன்டர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
அந்த பணிப்பெண்ணின் நிலை குறித்து இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் அரசிடம் இத்தாலி அரசு தகவல் தெரிவிக்கும் என்றும், தற்சமயம் இத்தாலியில் உள்ள போதை மருந்து கடத்தல் கும்பல்களுடன் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.-