தாய்லாந்து தொலைக்காட்சிகளுக்கு தானே நல்ல கதைகள் பலவற்றை எழுதித் தருவேன் என்று அந்நாட்டுப் பிரதமர் ப்ரயுத் சான் ஓச்சா கூறியுள்ளார்.
தாய்லாந்து நாட்டுத் தொலைக் காட்சிகளில் வன்முறை நிறைந்த தொடர்கள் வெளியாகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: "தொலைக்காட்சி களில் வன்முறை யும், பிரிவினை வாதமும் நிறைந்த தொடர்கள் வெளியாகின்றன. நம் நாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மக்களி டையே சண்டையையும், பிரிவினை யையும் உருவாக்கும். இவ்வாறான நிகழ்ச்சிகளை நிறுத்தி அமைதியை வளர்க்கும் தொடர்களை எழுத ஆணையிட்டுள்ளேன்.
தாய்லாந்து சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகியவை குறித்தும் தொடர்கள் எழுத உத்தர விட்டுள்ளேன். அந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்களால் அத்தகைய நிகழ்ச்சிகளுக்கான கதைகளை எழுத முடியாமல் போனால் நானே கதை எழுதித் தருவேன். அதில் ஒரு கதையில், இரண்டு வெளிநாட்டுக் குடும்பங்கள் தாய்லாந்துக்குச் சுற்றுலாவுக்காக வருகின்றன. அப்போது அவை தாய்லாந்து குடும்பங்களைச் சந்திக்கின்றன. உடனே அந்த குடும்பங்களுக்கிடையில் அன்பு மலர்வது போன்று அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் ப்ரயுத், கலைகளில் ஆர்வம் காட்டுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே இவர் எழுதிய 'மகிழ்ச்சியே தாய்லாந்துக்குத் திரும்பி வா' என்ற பாடல் அந்நாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.