இராக்கில் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சுலைமான் பெக், யங்கஜா ஆகிய 2 பகுதிகளையும் குர்திஷ் மற்றும் ஷியா பிரிவு ராணுவப் படைகள் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்- க்கு எதிராக குர்திஷ் மற்றும் இராக் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கப் படைகளும் சண்டையிட்டு வருகின்றன. ஷியா பிரிவினர்கள் இருக்கு பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடமிருந்து ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இணைந்து போராடும் படைகளால், சுலைமான் பெக் பகுதி மீட்கப்பட்டதாகவும், முழுவதுமாகவும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆங்கு கிளர்ச்சியாளர்கள் மண்ணுக்கு அடியே வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளதால், நகரம் முழுவதுமாக விடுவிக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே போல, தலைநகர் பாக்தாத் வழியே உள்ள சலாஹிதீன் மாகாணத்தில் உள்ள யங்கஜாவையும் மீட்க தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் அமெரிலிப் பகுதியிலும் இராக் ராணுவத்தினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்த பகுதிகளில் இருந்த ஷியா பிரிவு மக்கள் பத்திரமான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.