உலகம்

ஏன் சிலரால் கனவுகளை நினைவில் கொள்ள முடிவதில்லை?

செய்திப்பிரிவு

கனவுகள் பற்றிய ஆராய்ச்சிகள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதில் சில தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

இதில் கனவுகளை முழுமையாக நினைவில் கொண்டுவர சிலரால் மட்டுமே முடிகிறது. பெரும்பாலனவர்கள் தங்களுக்கு வரும் கனவுகளை நினைவுக் கொள்ள சிரமப்படுகிறார்கள்.

ஏனென்றால் நாம் உறங்கும்போது  நமது விழிகள் நான்கு நிலைகளுக்கு செல்லும்.

இதில் NREM (Non-rapid eye movement), ரெம் - REM (Rapid eye movement) என்ற இரண்டு தூக்க நிலைகளில் வரும் கனவுகள் வெவ்வேறு தன்மையைக் கொண்டவை.

முதல் வகை தூக்க நிலையான  NREM (Non-rapid eye movement) - நிலை சம நிலையான தூக்கத்தைக் கொண்டது. இந்த நிலையில் தூங்கும்போது கண்களில் எந்த அசைவும் இருக்காது. இதில் தசைகள் முடக்க நிலையில் இருக்காது.

இந்த நிலையில் கனவுகள் வருவது அரிது.

தூக்கத்தில் கடைசி நிலையை REM (Rapid eye movement) என்று குறிப்பிடுகிறோம்

இந்த நிலையில் கண்களில் மூழிகளில் அதிகப்படியாக அசைவுகள் இருக்கும். இதய துடிப்புகள் குறைந்து காணப்ப்டும்.

உடல் தசைகள் முடக்க நிலைக்கு சென்றுவிடும்.

அப்போது அசிடைல்கோலின், நோரெபினிஃப்ரைன்  வேதியியல் திரவங்கள்  மூளையில் சுரக்கின்றன.

இதில் நோரெபினிஃப்ரைன் மூளையில் செயல்பாடுகள் அழுத்ததிற்கு உட்படாமல் இருக்க உதவுகிறது. அதே வேளையில் கனவுகளை நினைவில் கொள்ளும் தன்மையையும் இது குறைக்கிறது.

இதுகுறித்து ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில் கனவுகள் பற்றிஆராய்ச்சியில் ஈடுபடும் ராபர்ட் ஸ்டிரிக்கோல்ட் கூறும்போது, “ நாம் கண்விழிக்கும்போது கனவுகள வலுவற்றவையாகிவிடும். அது ஏன் என்று கேட்பதற்கு பதில் நம்மிடம் இல்லை.. 

நீங்கள் ஞாயிறு மற்றும் சனிக்கிழமை காலை நேரங்களில் உறங்குபவராக இருந்தால்  அந் நேரங்கள் கனவுகளை நினைவில் கொள்ள சிறந்த நேரமாக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT