உலகம்

இந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் விபத்து: 30 பேர் பலி

செய்திப்பிரிவு

இந்தோனேசியாவில் தீப்பெட்டிக் கிடங்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகினர்.

இதுகுறித்து  அதிகாரிகள் தரப்பில், “இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திராவில் உள்ள பின்ஜின் நகரில் தீ ப்பெட்டிக் கிடங்கு தொழிற்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகினர்.

தீ  விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜகர்தாவின் வெளிப்பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் பலியாகினர்.

SCROLL FOR NEXT