ரஷ்யாவுக்கு எதிராக போரிட தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ மறைமுகமாக எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது எல்லையில் சண்டை நிறுத்தம் அமல் செய்யப்பட்டிருக்கிறது. ஒருவேளை அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் உக்ரைனை தற்காத்துக் கொள்ளும் திறன் நமக்கு உள்ளது. ரஷ்ய படைகள் வாபஸ் பெற்றால் மட்டுமே நமது ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் ரஷ்யா மீது போர் தொடுக்க எந்நேரமும் ராணுவம் யார் நிலையில் உள்ளது என்று அதிபர் பெட்ரோ போரோ ஷென்கோ மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.