உலகம்

”தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ட்ரம்ப் தகுதி வாய்ந்த நபர் இல்லை”

செய்திப்பிரிவு

தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ட்ரம்ப் தகுதி வாய்ந்த நபர் இல்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா காமேனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  ஈரான் மதத் தலைவர் அயதுல்லா காமேனி கூறும்போது, “தகவல்களை பறிமாறிக் கொள்வதற்கு தகுதியான நபராக ட்ரம்ப் எனக்கு தெரியவில்லை.  என்னிடம் அவருக்கு பதில் அளிப்பதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

அணு ஆயுத சோதனை ஓப்பந்த மீறலில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் விரிவடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் நட்பு பாராட்டி வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே ஈரானுக்கு அரசியல் ரீதியாக சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.

ஷின்சேவின் இந்தப் பயணத்தில் அமெரிக்க - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இத்தகைய பதில் ஈரானிடமிருந்து வந்துள்ளது.

ஈரான் - அமெரிக்க மோதல்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து, அந்நாட்டுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்நிலையில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.

SCROLL FOR NEXT