உலகம்

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்

செய்திப்பிரிவு

சீனாவில்  நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சீனா டெய்லி பத்திரிகை, ''சீனாவின் வடகிழக்குப் பகுதியில் ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியானது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடான சீனாவில் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகின்றன். தேவையான பாதுகாப்பு அம்சங்களை நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்காததால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீனாவில் ஆண்டுதோறும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT