உலகம்

லிபியாவில் இருதரப்பு மோதல் - 31 பேர் பலி

செய்திப்பிரிவு

லிபியாவின் கிழக்கு நகரான பெங்காஸியில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் பதவியை துறந்த ராணுவ தளபதிக்கு ஆதரவான போட்டி குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 31 பேர் உயிரிழந்தனர்.

பெங்காஸி புரட்சிகர ஷுரா கவுன்சில் என்ற இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் ஜெனரல் கலிபா ஹிப்டர் ஆதரவு படையினருக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. ஹிப்டர் ஆதரவு படையினர் ஜெட் விமானங்கள் மூலம் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக தீவிரவாதிகளும் தரையிலிருந்து பதில் தாக்குதல் நடத்தினர்.

பெங்காஸி நகரின் பெனினியா விமான நிலையத்தை சுற்றிலும் நடைபெற்ற இம் மோதல் பல மணி நேரம் நீடித்தது. இதில் ஹிப்டர் தரப்பில் 20 பேரும் தீவிரவாதிகள் தரப்பில் 11 பேரும் உயிரிழந்தனர். மேலும் இருதரப்பிலும் 31 பேர் காயமடைந்தனர். இத்தகவலை பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT