உலகம்

ஈஸ்டர் தாக்குதல்: துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கை கொண்டு வரப்பட்டனர்

செய்திப்பிரிவு

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 5 பேர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்டனர்.

இதுகுறித்து இலங்கை போலீஸார் வெள்ளிக்கிழமை கூறும்போது, “இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 5 பேரை கைது செய்ய செவ்வாய்க்கிழமை குழு ஒன்று துபாய்க்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் இலங்கை கொண்டுவரப்பட்டனர். தொடர்ந்து விசாரணை அவர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று  இலங்கையில் கிறித்தவ தேவாலயம்,  நட்சத்திர ஓட்டல்கள்  உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.

இலங்கையிலுள்ள என்.டி.ஜே. அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பைத் தடை செய்தது.

SCROLL FOR NEXT