உலகம்

ஜி 20 மாநாடு: உலகளாவிய பொருளாதாரம்,பொருளாதாரக் குற்றவாளிகள், பேரழிவு மேலாண்மை குறித்து மோடி - அபே ஆலோசனை

செய்திப்பிரிவு

ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேவும் உலகளவிய பொருளாதாரம், தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள், பேரழிவு மேலாண்மை ஆகியவை  குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பிரதமர் மோடி ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (வியாக்கிழமை) காலை ஜப்பானின் ஒசாகா நகரம் வந்தடைந்தார்.

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கியப் பிரச்சினைகளில் இந்தியாவின் கருத்தை முன்வைக்க  இருக்கிறார் பிரதமர்  என்று இந்திய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்ட நிலையில் ஜப்பான் பிரதமர் அபேவுடன் ஆலோசனைகளில் பங்கேற்றார் மோடி.

இதில், இந்தியா - ஜப்பான் உறவு, உலகளவிய பொருளாதாரம், தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளிகளால் ஏற்படும் பிரச்சினைகள், பேரிடர் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பான வரவேற்பு அளித்தற்காக மோடி அபேவுக்கு  நன்றி தெரிவித்தார்.

மோடி இரண்டாவது முறையாக பிரதமரானதற்குப் பிறகு மோடி - அபே இடையே நடந்த இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

இந்தாண்டு இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ஜப்பான் பிரதமர் அபேவின் வருகையை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் மோடி தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய சமூகத்தினரிடம் மோடி உரையாடலில் பங்கேற்றார்.

SCROLL FOR NEXT