போஸ்னியா போரின்போது கொல்லப்பட்ட 12 உடல்கள் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பினா ஏஜென்சி தரப்பில், ''போஸ்னியாவில் 1992 - 1995 ஆம் உள்நாட்டுப் போர் நடந்தது. இதில் 1 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 7,000 இதுவரை மாயமாகி உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் போரில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சராஜிவோ மலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி போஸ்னியா ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை போஸ்னியா போரில் கொல்லப்பட்ட சுமார் 25,000 உடல்கள் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்டன. அதில் பெரும்பாலானவை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை.
சுமார் 8,000 முஸ்லிம் இளைஞர்கள் போஸ்னியா போரில் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பில் நடந்த மிகப் பெரிய இனப் படுகொலையாக இது கருதப்படுகிறது.