அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் எதனைக் குறிவைத்து இந்தப் பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை'' என்றார்.
இந்நிலையில் சவுதி சென்றிருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் போக்கு குறித்து ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.