சிரியா தொடர்ந்து எங்களது கண்காணிப்பு பகுதிகளை தாக்கினால் நாங்களும் தகுத்த நடவடிக்கை எடுப்போம் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள துருக்கி கண்காணிப்பு பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லட் கூறும்போது, “ சிரிய இந்தத் தாக்குதலை தொடர்ந்தால் துருக்கி இது தகுந்த நடவடிக்கையை எடுக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.
இதற்கு சிரியா தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், , ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் ஐஎஸ் வசமுள்ள மற்ற பகுதிகளை மீட்க இறுதிப் போர் நடத்தப்பட்டு வருகிறது.