அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக இஸ்ரேலின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மனைவிக்கு 15,000 டாலர் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் மனைவி சாரா நெதன்யாகு. இவர் அதிபர் இல்லத்தில் சமைப்பதற்கு யாரும் இல்லை என்று கூறி சுமார் 99,300 டாலர்களை அரசு நிதியிலிருந்து தவறுதலாகப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கடந்த வருடம் குற்றன் சாட்டப்பட்டார்.
இந்நிலையில், தன் மீதான குற்றத்தை சாரா ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 15,000 டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாரா நெதன்யாகுவின் வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்து கூறும்போது, ”இதில் சாராவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் பிம்பத்தை கீழிறக்குவதற்கான முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.