ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், ஏற்கெனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலைக்கு புதிதாக பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.