உலகம்

இராக்கில் ஐ.எஸ் இனஅழிப்பு செய்கிறது: அம்னெஸ்டி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

இராக்கில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, அங்கு அப்பாவி மக்களை படுகொலை செய்து இன அழிப்பு செய்வதாக அம்னெஸ்டி அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

சர்வதேச பொது மன்னிப்பு சபையான அம்னெஸ்டி நிறுவனம் கூறும்போது, "இராக்கின் மேற்கு பகுதியில், கடந்த ஜூன் மாதம் முதல் குறிப்பிட்ட மத சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கிறுஸ்துவர்கள் மற்றும் அங்கு உள்ள யாஷிதி இனத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர் சிறுமியர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர்.

எங்களது ஆவணப்படி பல நூற்றுக்கணக்கான யாஷிதி இனத்தவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களது கதி குறித்த விவரமே அறியப்படவில்லை" என்று அம்னெஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT