இந்த மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செல்லவிருக்கிறார். அங்கு அவருக்குச் சிறப்பான முறையில் வரவேற்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியில் வென்ற இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2014ம் ஆண்டு `மிஸ் அமெரிக்கா' போட்டியில் வெற்றி பெற்றவர் நினா தவுலுரி (25). `மிஸ் அமெரிக்கா' போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் இவர் ஆவார். இவரும், பி.பி.எஸ். நியூஸ் ஹவர் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஹரி ஸ்ரீநிவாசனும் மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்கள்.