நைகர் நாட்டின் தலைநகரில் நடந்த டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிகை 76 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நைகர் நாட்டு ஊடகங்கள் தரப்பில், ''ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைகர் நாட்டின் தலைநகரம் நியாமியில் கடந்த வாரம் எரிபொருளை ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. இதில் பலியானவர்கள் எண்ணிகை 50 ஆக இருந்த நிலையில் தற்போது 76 ஆக அதிகரித்துள்ளது.
டேங்கர் லாரி ரயில்வே ட்ராக்கில் திரும்பும்போது சறுக்கி விபத்துக்குள்ளானது. இதனால் அதிலிருந்து கீழே ஊற்றிய எரிபொருளைச் சேகரிக்கச் சென்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் இவர்கள் பலியாகினர். இதில் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பல வீடுகள் சேதமடைந்தன'' என்று செய்தி வெளியானது.
இந்த விபத்து காரணமாக புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நைகர் நாட்டில் துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.