உலகம்

கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்ட பிரெண்டன் டாரன்ட் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50  பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் குற்றவாளி பிரெண்டன் டாரண்ட் மீது அந்நாட்டு போலீஸார் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இதுவே முதல்முறை.

இந்தச் சட்டம்  நியூஸிலாந்தில் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT