உலகம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டாவுக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

செய்திப்பிரிவு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆடர்ன்னுக்கும் அவரது  நீண்ட நாள் காதலரான கிளார்க் கேபோர்ட்க்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா (38) அவரது காதலரான கிளார்க் கேபோர்ட் (41)  நிச்சயதார்த்தம்  நடந்து முடிந்துள்ளதாக நியூசிலாந்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பொதுவான அறிவிப்பு மக்களுக்கு இதுவரை தெரிவிக்கபடவில்லை.

ஜெசிண்டா, கிளார்க்கின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இவர்களுக்கு பெண் குழந்தை  ஒன்று இருக்கிறது.

நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் தாக்குதலில்,  தாக்குதல் நடந்த சமயத்தில்  இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக ஜெசிண்டாவின் நடவடிக்கைகள்  நாடு கடந்து அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT