அமெரிக்காவின் கோலராடோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கியக் குற்றவாளி டேவின் எரிக்சன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமெரிக்காவின் கோலராடோ மாகாணத்தில் உள்ள ஸ்டீம் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியானார். 8 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கியக் குற்றவாளி டேவின் எரிக்சன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் தலையைக் குனிந்தபடியே நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் டேவின். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் டேவினுக்கு உதவிய அப்பள்ளியின் மாணவி ஆஜர்படுத்தப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான காரணம் என்ன என்று இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. எனினும் மாணவர்கள் கிண்டல் செய்தததால் அவர்களைப் பழிவாங்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
18 வயதான டேவின் எரிக்சன் தனது முகநூலில் ட்ரம்ப்புக்கு எதிரான பதிவுகளைப் பகிர்ந்துள்ளார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.