இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மெக்கன் மார்கல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இந்தத் தம்பதிக்கு திங்கட்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
ஹாரி மற்றும் மெக்கன்னுக்கு பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.