சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் பொது வாக்குரிமை வேண்டும் என்று ஹாங்காங் மக்கள் சீனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை ஒடுக்க, ஹாங்காங் காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசிய பிறகும், போராட்டம் கலையாமல் இருப்பது ஹாங்காங் அரசுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் மாணவர்கள் ஆவர். அவர்களைக் கலைந்து செல்ல ஹாங்காங் காவல்துறை எச்சரித்தது. 'தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள நினைப்பவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்குங்கள்' என்று பயமுறுத்தியது.
ஆனால் மக்கள் கலைந்து செல்லவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது ரப்பர் குண்டுகள் பொழியப்பட்டன. அப்போதும் மக்கள் அசரவில்லை. அதன் பிறகு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஹாங்காங்கில் கடைசியாக 2005ம் ஆண்டில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு இப்போதுதான் அதைப் பயன்படுத்துகிறது அந்நாட்டுக் காவல்துறை.
2017ம் ஆண்டு ஹாங்காங்கின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக் கத் தேர்தல் நடத்தப்படும் என்று சீனா கூறினாலும், சீன அரசு அமைக்கும் குழுவே வேட்பாளர் களைத் தேர்ந்தெடுக்கும் என்று கூறி வருகிறது. இதை எதிர்த்து முழு ஜனநாயக சீர்திருத்தம் வேண்டி இந்தப் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத் தம் வேண்டி தொடங்கப்பட்ட 'ஆக்குபை சென்ட்ரல்' என்ற அமைப்பும் போராடி வருகிறது. இந்தப் போராட்டம் தொடர்பாக இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.