உலகம்

இலங்கை கலவரத்தில் ஒருவர் கொலை

செய்திப்பிரிவு

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் முஸ்லிம் மதத்தினர் வைத்திருந்த கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நேற்று மாலை இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தக் கலவரத்தில் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், ''கும்பல் ஒன்று முஸ்லிம் நபர் நடத்திவந்த கடையையும் அவரையும் கடுமையாகத் தாக்கியது. இதில் அந்த நபர் கொல்லப்பட்டார். பல இடங்களிலும் வீடுகளும் மசூதிகளும் தாக்கப்பட்டன. வீடியோ ஆதாரங்களை வைத்து கலவரங்களில் ஈடுபட்ட சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT