உலகம்

இலங்கையில் தேவலாயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகள் ரத்து

செய்திப்பிரிவு

முறையான அறிவிப்பு வரும்வரை இலங்கையிலுள்ள  கத்தோலிக்க தேவலாயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தோலிக்க தேவலாயங்கள் தரப்பில்,”  இலங்கை தாக்குதல்  நடத்துவதற்கு அதிக சாத்திய கூறுகள் இருப்பதால் முறையான அறிவிப்பு வரும்வரை இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவலாயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்படும். பாதுகாப்பின் ஒரு அங்கமாக தேவலாயங்களில் பைகள் ஏதும் அனுமதிக்கபடாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று  இலங்கையில் கிருத்துவ தேவாலயம்,  நட்சத்திர ஓட்டல்கள்  உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது.

மேலும் இலங்கையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகத்தை மூடும்படியான ஆடைகள் அணியவும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT