பாகிஸ்தானில் பதின் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் பலியாகினர் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள், “ பாகிஸ்தானில் கராச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பதின் நகரில் விபத்துக்குள்ளானது. அதில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
விபத்து குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.