தங்கள் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா குற்றச்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சனா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள சிரியாவின் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 சிரிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு கட்டிடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதற்கு சிரியா சார்பில் பதிலடி அளிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவின் குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடந்தும் உள்நாட்டுப் போருக்கு ஈரான் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஈரான் தனது நாட்டு ராணுவ வீரர்களை சிரியா பாதுகாப்பு படைக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பு வைத்துள்ளது.
இஸ்ரேலை பொறுத்தவரை அந்த நாடு மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானை தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாக கருதுகிறது. இந்த நிலையில் சிரியாவின் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.