இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ராகுல் வர்மாவை (45) இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமித்துள்ளார் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்தியர் ஒருவரை இந்தப் பதவிக்கு நியமனம் செய்திருப்பது குறிப் பிடத்தக்கது.
இந்த நியமனத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி னால், இந்தப் பதவியை வகிக்கும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமை வர்மாவுக்கு கிடைக்கும்.
அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் வர்மா, இப்போது ஸ்டெப்டோ அன்ட் ஜான்சன் எல்எல்பி மற்றும் அல்பிரைட் ஸ்டோன் பிரிட்ஜ் குழுமம் ஆகியவற்றில் ஆலோசகராக உள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத் துறையின் சட்ட விவகாரங்களுக்கான துணை செயலாளராகவும் (2009 2011) இவர் பணியாற்றி உள்ளார். முதுநிலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், செனட் பெரும் பான்மை தலைவர் ஹாரி ரீட் என்பவரின் ஆலோசகர் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் வர்மா.