இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஷாங்ரி-லா மற்றும் சின்னமோன் கிராண்ட் ஹோட்டல்களில் வெடிபொருட்களை வெடிக்கச் செய்து பலநூறு பேர் பலியானக் காரணமான கொடூரத் தாக்குதல் நடத்திய முஸ்லிம் சகோதரர்களின் பணக்காரத் தந்தை வியாபாரி முகமது யூசுப் இப்ராஹிம் இன்று இலங்கை போலீஸால் கைது செய்யப்பட்டார்.
இல்ஹாம் அகமது இப்ராஹிம், இம்சத் அகமது இப்ராஹிம் ஆகிய இரண்டு மகன்களையும் பயங்கரவாதச் செயல்களுக்கு தந்தை யூசுப் இப்ராஹிம் ஊக்குவித்திருக்கலாம், உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிஎன்என் கூறுகிறது.
மேலும், கொழும்புவில் இந்த வர்த்தகரின் கொழும்பு மேன்ஷனையும் போலீஸார் தேடி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 8வது குண்டு வெடிப்பு இடம் இது என்பதாலும் இதில் 3 போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
மூத்த சகோதரன் இல்ஹாம், இவர்தான் சின்னமோன் கிராண்ட் ஹோட்டலில் வெடி வைத்தது, இவரை போலீஸார் முன்னரே ஒருமுறை கைது செய்து விடுவித்ததாக அரசு செய்தி தொடர்பாளர் சிஎன்என் -க்குத் தெரிவித்தார்.
9 தற்கொலைப் படையினரி 8 பேர் அடையாளம் காணப்பட்டனர், இன்னொரு பெண், தற்கொலை தாக்குதல் நபரின் மனைவியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் பொறுப்பேற்றுக் கொண்டது, ஆனால் இலங்கை அரசு உள்நாட்டு இஸ்லாமிய அமைப்பைக் குற்றம்சாட்டுகிறது.
ஆனால் இந்த இலங்கைத் தாக்குதல் உலக அளவில் பெரிய அதிர்ச்சி அலைகளை எழுப்ப இண்டர்போல், ஸ்காட்லாந்து யார்டு, எஃப்.பி.ஐ. ஆகிய உலக விசாரணை அமைப்புகள் இலங்கையில் முகாமிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் தொடர்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.