பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ''பிலிப்பைன்ஸில் திங்கட்கிழமை நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலாவிலிருந்து வடமேற்கில் 60 கிலோ மீட்டர் தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் எற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6. 4 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 11 பேர் பலியாகி இருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.