பாகிஸ்தானில் கவுட்டா நகரில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் கவுட்டா நகரில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குண்டு வெடித்தது. இந்தக் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காலை 7. 35 மணியளவில் நடந்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு நடந்த இடத்துக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பினால் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.