ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை தலிபான் களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 21 பேர் பலியாயினர்.
இந்தச் சம்பவம் குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் காஸ்னி நகரத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 21 பேர் பலியாயினர். அவர்களில் 18 பேர் தீவிரவாதிகள் ஆவர். மூன்று பேர் காவல்துறையினர் ஆவர். மேலும் 4 காவல் துறை அலுவலர்கள் கடத்தப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.