உலகம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது: தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்வு; 40 பேர் கைது

செய்திப்பிரிவு

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந் துள்ளது. குண்டுவெடிப்பு தொடர் பாக 40 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த ஈஸ்டர் பண்டிகை தினத் தில் இலங்கையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணி யார் தேவாலயம், நீர்க்கொழும்பு வில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கொழும்பில் உள்ள ஷாங்ரி லா நட்சத்திர ஓட்டல், கிங்ஸ் பரி நட்சத்திர ஓட்டல், சின்னமான் கிராண்ட் நட்சத்திர ஓட்டல், தெகி வலையில் உள்ள உயிரியல் பூங்கா, தெமடகொட ஆகிய எட்டு இடங் களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 7 தாக்குதல் கள் தற்கொலை படையினரால் நடத் தப்பட்டது என தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலைப்படைத் தாக்குதலின் பின்னணியில் இலங் கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்புள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்பட் டிருந்தது.

குண்டு வெடிப்புகளில் காய மடைந்தோருக்கு கொழும்பு, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள பல் வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோரில் 10 இந்தியர்கள் உட்பட 35 வெளிநாட்டினரும் அடங்குவர். 500-க்கும் அதிக மானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர் குண்டுவெடிப்பு காரண மாக, ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்ட நிலையில், திங்கட் கிழமை அவசர நிலையை பிரகட னம் செய்வதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி சேனா அறிவித்தார். இந்த தாக்குதல்களுக்கு பின்னால், சர்வதேச தீவிரவாத அமைப்பு களின் தொடர்பிருப்பதாக உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதையடுத்து இலங்கை அதிபர் சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடியுள்ளார். குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு முழு உதவி செய்யத் தயாராக இருப்பதாக இண்டர்போல் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கூடியது

இலங்கையில் நாடு முழு வதும் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் செவ் வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடி யதும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் உரையாற் றிய சபாநாயகர் கருஜயசூரிய, “நாடாளுமன்றத்தின் மீது தாக்கு தல் நடத்த வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்றத்துக்கு மட்டுமல் லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாது காப்பு தேவை” என்றார்.

இலங்கையின் முன்னாள் அதி பரும் எதிர்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச பேசும்போது, ''கடந்த 30 ஆண்டுகளாக விடு தலைப் புலிகளுடன் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை. அதிபரும் பிரதமரும் எதிரெதிரான திசையில் இருந்து கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவான் விஜேவர்தன பேசும் போது, “கடந்த மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்து நாட்டில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் இரண்டு மசூதிகளில் பிரென்டன் டர்ரன்ட் என்ற தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 50 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன” என்றார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது உரையின்போது, “இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் என்னுடன் பேசினார்கள். சர்வதேச நாடுகளின் உதவியுடன் நாம் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வரும் போது அதனை சீர்குலைக்க இந்த முயற்சி நடந்துள்ளது. குண்டுவெடிப்புகளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர்” என்றார்.

மன்னிப்பு

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன, “இலங்கையில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னதாகவே உளவுத்துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டோம். நாங்கள் இதனை நிச்சயமாகக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தவறி விட்டோம். இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்கள் அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். பாதிப் படைந்த தேவாலயங்கள் புனர மைக்க உதவி செய்யப்படும்'' என்றார்.

துக்கம் அனுஷ்டிப்பு

நேற்று (செவ்வாய்க் கிழமை) நாடு தழுவிய துக்கமும் அனு சரிக்க அதிபர் மைத்ரிபால சிறி சேனா உத்தரவிட்டதால் அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு துக்க தினம் அனுஷ் டிக்கப்பட்டது. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல் களை நீர்க்கொழும்பில் உள்ள செபாஸ்டியன் தேவாலயத்தில் கூட்டாக அடக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

இலங்கை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

சம்பந்தம் இல்லை

இதனிடையே கிறைஸ்ட்சர்ச் சில் நடந்த தாக்குதல்களுக்கும் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் சம்பந்தம் இருக்காது என்று தீவிரவாதம் தொடர்பான ஆய்வில் ஈடு பட்டுள்ள வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த விதம், அதற்காகப் பயன் படுத்தப்பட்ட பொருட்களை வைத்துப் பார்க்கும்போது இதற் குத் தயாராக பல மாதங் களாகியிருக்கும் என்று தெரி கிறது. ஆனால் கிறைஸ்ட்சர்ச் சம்பவம் நடந்து 5 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ளது. எனவே இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்காது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

10 இந்தியர்கள் பலி

இலங்கை குண்டுவெடிப்பு சம் பவங்களில் இறந்த இந்தியர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந் துள்ளது என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது.

நேற்றுமுன்தினம் வரை 8 இந்தியர்கள் இறந்ததாக அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மரேகவுடா, எச்.புட்டராஜு ஆகிய 2 இந்தியர்கள் இறந்ததாக தூதரகம் அறிவித்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து உள்ளார்.

SCROLL FOR NEXT