உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கர்காவில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் லெனினின் சிலை உடைக்கப்பட்டது.
கார்காவ் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்ட லெனின் சிலை முன்பு நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அவர்கள் கயிறு கட்டி சிலையை கீழே தள்ளினர். பின்னர் அந்த சிலையை உடைத்தெறிந்தனர். அங்கிருந்த போலீஸார் இதனை தடுக்கவில்லை.
உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த நாடு முழுவதும் சுமார் 160 இடங்களில் இருந்த லெனின் நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.