உலகம்

ஜிகாதிகளை வெளியேற்ற கடுமையான சட்டம்: இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே

செய்திப்பிரிவு

ஜிகாதிகளை வெளியேற்ற கடுமையான சட்டங்களை இலங்கை அறிமுகப்படுத்த இருப்பதாக இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே  பத்திரிகை ஒன்றில்பேசும்போது, “ ”இலங்கையில் சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பிடிப்பட்டாலும் அவர்களை கைது செய்வதற்கான சட்டம் கிடையாது.

ஆனால் புதிதாக நிறைவேற்றப்படவுள்ள தீவிரவாத தடுப்பு மசோதாவில் நாங்கள் இதனை அறிமுகப்படுத்தவுள்ளோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஈஸ்டர் தாக்குதல்கள் போன்றவை தடுக்கப்படும்”என்றார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டம் கல்முனை அருகே சாய்ந்த மருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்து போலீஸார், பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனையறிந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதலை நடத்தினர். இதில், வீட்டில் இருந்த 3 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர்.

SCROLL FOR NEXT