உலகம்

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதிரொலி: இலங்கையில் அவசரகால சட்டம் நிறைவேறியது

செய்திப்பிரிவு

இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர காலச் சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டம் கொழும் பில் நடைபெற்றது. அன்றைய தினத் தில் இலங்கையில் கொழும்பு கொச்சிக் கடை புனித அந்தோணியார் தேவால யம், நீர்க்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கொழும்பில் உள்ள ஷாங்ரி லா நட்சத்திர ஓட்டல், கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டல், சின்னமான் கிராண்ட் நட்சத்திர ஓட்டல், தெகிவலை யில் உள்ள உயிரியல் பூங்கா, தெமட கொட ஆகிய எட்டு இடங்களில் அடுத் தடுத்து குண்டுகள் வெடித்தன.

இதில் 9 தாக்குதல்கள் தற் கொலை படையினரால் நடத்தப்பட் டது என தெரிய வந்துள்ளது. தற்கொலைப் படையினரில் ஒருவர் பெண் ஆவார்.

பலி எண்ணிக்கை உயர்வு

நேற்று முன்தினம் வரை இந்த சம்பவங்களில் 321 பேர் இறந்திருந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இறந்த வர்களின் எண்ணிக்கை நேற்று 359-ஆக உயர்ந் துள்ளது.

இதனிடையே இலங்கை நாடாளு மன்றம் நேற்று காலை கூடியது. அப் போது அவசரக் காலங்களில் மேற் கொள்ளும் கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விவாதம் நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. காலை முதல் மாலை வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரகால சட்ட மசோதா குறித்து விவாதித்தனர்.

இதனிடையே இன்று குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூட்டியுள்ளார்.

60 பேர் கைது

குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “கைது செய்யப்பட்ட 60 பேரில் 32 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

பாதுகாப்பு செயலர் ராஜினாமா

இதனிடையே நாட்டின் பாதுகாப் புத்துறை செயலர் ஹேமாசிறி பெர் னாண்டோ, காவல்துறை தலைவர் போலீஸ் ஜெனரல் புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை ராஜினாமா செய்யும்படி அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்தும், குண்டுவெடிப்பு சம்பவங் களைத் தடுக்காததற்காக அவர்களை ராஜினாமா செய்ய அதிபர் உத்தரவிட் டுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர் கள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோ சனைக்குப் பிறகு இந்த முடிவை அதிபர் சிறிசேனா எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து புதிய பாதுகாப் புத்துறை செயலராக முன்னாள் ராணுவ கமாண்டர் தயா ரத்னாயகே நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இதனிடையே இலங்கையில் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

ஊரடங்கு உத்தரவையொட்டி போலீ ஸாரும், ராணுவத்தினரும் தொடர்ந்து பாதுகாப்பில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள் ளப்பட்டது. பிறகு நேற்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப் பட்டது. இது இன்று காலை வரை நீடிக்கும் எனத் தெரிகிறது.

புர்காவுக்குத் தடை

இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடைக்குத் தடை விதிப்பது தொடர்பாக இலங்கை அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது தீவிரவாதிகள் சிலர் புர்கா அணிந்து தப்பியதாகத் தெரியவந்துள் ளது. எனவே நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புர்கா உடைக்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக் கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடனும் ஆலோசனை நடத் தப்பட்டுள்ளதாகவும் அரசு வட் டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT