உலகம்

கென்யா பள்ளி தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கில்கில்: மத்​திய கென்​யா​வில் ஒரு பெண்​கள் பள்​ளி​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில் 16 மாணவி​கள் உயி​ரிழந்​தனர். மத்​திய கென்​யா​வின் கில்​கில் பகு​தி​யில் உது​மிஷி பெண்​கள் பள்ளி உள்​ளது.

இந்த உறை​விடப் பள்​ளி​யில் 800-க்​கும் மேற்​பட்ட மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தப் பள்​ளி​யின் மாணவிகள் விடு​தி​யில் இரவில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் 16 மாணவி​கள் உயி​ரிழந்​த​தாக​வும் மேலும் 79 பேர் காயம் அடைந்ததாக​வும் அந்​நாட்டு கல்வி அமைச்​சர் ஜூலியஸ் ஒகாம்பா கூறி​னார். இது குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்கொண்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT