வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வெளியுறவுச் செயலாளர் விஜய் கோக்லெவுடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த நிலையில் வெனிசுலா குறித்து அவர்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் கேட்பது போலவே இந்தியாவிடமும் இதனை கேட்கிறோம்.
வெனிசுலா அதிபர் மதுரோ அரசிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று நம்புகிறோம். இந்தியா வெனிசுலா மக்களுக்கு இடையே உள்ள அச்சத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். இது ஆரோக்கியமான உரையாடலாக இருந்தது. இங்கு நடந்த உரையாடல்களை பற்றி விவரவங்களை தெரிவிக்க இயலாது” என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில் மூன்றாவது பெரிய நாடாக வெனிசுலா உள்ளது.