உலகம்

ஜிம்பாப்வேவில் சூறாவளிக்கு 24 பேர் பலி: பலர் மாயம்

செய்திப்பிரிவு

ஜிம்பாப்வேவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 24 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜிம்பாப்வே ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ''ஜிம்பாப்வேவில் கிழக்குப் பகுதியை IDAI சூறாவளி தாக்கியதில் மாணவர்கள் 24  பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள்  மாயமாகியுள்ளனர். பல இடங்களில் பாலங்களும், வீடுகளும் சரிந்துள்ளன.

மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் காற்று வேகமாக வீசுவதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தாமதமாகியுள்ளது. சூறாவளி பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐடியேஐ (IDAI) சூறாவளியில் 24 பேர் இறந்துள்ளதை ஜிம்பாப்வே அரசும் உறுதி செய்துள்ளது.

SCROLL FOR NEXT