ஈரானில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களுக்கு வெள்ள எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதில் 18 பேர் பலியாகினர்.
100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய உள்ளதால் ஈரானின் வடக்குப் பகுதியும் பாதிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் உடனடி உதவிகளைச் செய்யத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தின் விளைவே ஈரானில் எற்பட்ட வெள்ளம் என்று ஈரான் அமைச்சகம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.