மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட ரயில் விபத்தில், 24 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து காங்கோ ரயில்வே துறை, ''காசை மாகாணத்தில் உள்ள பினா லேகாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் 24 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள்.
20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன'' என்று தெரிவித்துள்ளது.
ரயிலில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காங்கோ அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காங்கோவில் ஏற்பட்ட மூன்றாவது ரயில் விபத்து இதுவாகும். கடந்த மாதம் கேலண்டாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் பலியாகினர்.