ஒருவாரத்துக்குள் ஐஎஸ்-க்கு எதிரான வெற்றியைஅறிவிப்போம் என்று சிரிய அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிரியாவின் ஐனநாயக படையின் தலைமை தளபதி கொம்பானி வீடியோ ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து , “ ஐஎஸ்ஸுக்கு எதிரான சிரியாவில் எங்கள் முழுமையான வெற்றியை ஒருவாரத்திற்குள் தெரிவிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே இறுதிக் கட்ட போர் நடந்து வருவதால், ஏராளமான மக்கள் வடகிழக்கு பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை இட்லிப் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். இந்தத் தாக்குதலில் 51 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், , ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் ஐஎஸ் வசமுள்ள மற்ற பகுதிகளை மீட்க இறுதிப் போர் நடத்தப்பட்டு வருகிறது.