உலகம்

மெக்சிகோவில் லாரி மோதி விபத்து: 25 பேர் பலி

செய்திப்பிரிவு

மெக்சிகோவில் லாரி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 25 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ‘‘தெற்கு மெக்சிகோவில் கவுத்தமாலா எல்லையில் வியாழக்கிழமை இரவு லாரி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 25 பேர் பலியாகினர். 30கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஓட்டுநர் தனது கட்டுபாட்டை இழந்தது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று  முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட இந்தப் பகுதி மெக்சிகோவிலிருந்து கவுத்தமாலா, அமெரிக்காவுக்கு குடிபெயற செல்பவர்களுக்கு பயணிக்கும் பிரதான இடமாக உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT