பெண் ஒருவரின் பணத்தைப் பறித்த திருடன், அதை அவரிடமே திரும்ப ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ஏடிஎம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த திருடன் ஒருவர், அப்பெண்ணைக் கத்தி முனையில் மிரட்டினார். பெண் ஏடிஎம்மில் இருந்து எடுத்த பணத்தைப் பிடுங்கிக் கொண்டார்.
வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தையும் எடுத்துக் கொடுக்குமாறு கட்டளையிட்டார். ஏஎடிஎம்மில் பணம் எதுவும் இல்லை என்று பெண் தெரிவித்தவாறே, வங்கிக் கணக்கைக் காண்பிக்கிறார். அதில் நிஜமாகவே ஒற்றை ரூபாய் கூட இல்லை.
இதனைக் கண்டு மனம் மாறிய திருடன், ஏற்கெனவே பிடுங்கிய பணத்தையும் அந்தப் பெண்ணிடமே கொடுத்துவிட்டுச் செல்கிறார். இதைப் பார்த்த இளம்பெண் ஆச்சர்யத்தில் உறைகிறார். தெற்கு சீனாவின் ஹெயூவான் நகரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளன. ஆனால் அதைக் கொண்டே சீன போலீஸார் திருடனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர்.
இவரல்லவா நல்ல திருடன் என்றும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டும் வருகின்றன
இந்த வீடியோவை சீன முன்னணி ஆங்கில நாளிதழான சிஜிடிஎன் வெளியிட்டுள்ளது.
வீடியோவைக் காண