உலகம்

பஹாமஸ்: ஹைதி மக்கள் வந்த படகு கவிழ்ந்து விபத்து - 28 பேர் பலி

செய்திப்பிரிவு

பஹாமஸ் நாட்டில் கடலோரத்தில் ஹைதி மக்கள் வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பஹாமஸ் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் தலைமை அதிகாரி ஜோனந்தன் ரோலே கூறும்போது, “

அபாகோ தீவுப் பகுதியில் ஹைதி மக்கள் (புலப்பெயர வந்தவர்கள்) வந்த படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 28 பேர் பலியாகினர். 17 பேர் மீட்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது.” என்றார்.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான படகில் வந்தவர்கள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்றும், கடந்த ஒரு வருடத்தில் கடத்தலில் தொடர்புடைய ஹைதியை சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பஹாமஸ் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்து குறுத்து ஹைதி அமெரிக்க தூதரகம், “மற்றொரு மோசமான நிகழ்வு முறையற்ற புலம்பெயர்வு, கடத்தல் போன்ற சம்பவங்கள் மோசமான முடிவையையே தரும்” என்று கூறியுள்ளது.

SCROLL FOR NEXT