பிரேசிலில் பிரபல கால்பந்து அணியான ஃப்ளமிங்கோ பயிற்சிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''பிரேசிலில் பிரபல கால்பந்து கிளப்பான ஃப்ளமிங்கோ பயிற்சிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஓய்வு அறையில் உறங்கிக் கொண்டிருந்த வீரர்கள் அறையில் தீ பரவியது. இந்தத் தீயில் சிக்கி வீரர்கள் 6 பேரும், அந்த கிளப்பில் பணி புரிந்த 4 பேரும் பலியாகினர்.
மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான விவரம் இதுவரை தெரியவில்லை'' என்று செய்தி வெளியானது.
இந்த விபத்துக்கு பிரேசிலின் பிரபல கால்பந்தாட்ட விரர் ரொனால்டினோ உட்பட பலரும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பிரேசில் துணை அதிபர் ஹமில்டன் மோரா கூறும்போது,” கால்பந்தாட்டத்தின் ரசிகனாக நான் இதில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு துணை நிற்கிறேன். இறைவன் அனைவருக்கும் ஆறுதல் அளிப்பார்'' என்று தெரிவித்துள்ளார்